தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
03.02.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே விற்பனை செய்வதற்காக 1.250kg கஞ்சா வைத்திருந்த கவாஸ்கர் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரையும் SI திரு.சுதர்சன் அவர்கள் U/s 8(C) r/w 20(b) (ii)(B) of NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை?: 3 பேர் கும்பல் வெறிச்செயல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் […]
மதுரை கீரைத்துறையை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது மதுரை கீரைத்துறை நல்லமுத்துப்பிள்ளை ரோட்டில் வசித்து வரும் ஆசைப்பாண்டி மகன் முத்து பாலகிருஷ்ணண் என்ற பொட்டு முத்து வயது 28/22, இவர் மீது கொலை முயற்ச்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இதனால் இவருடைய நடத்தைகள் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்த து. இவரது சட்ட விரோதமான நடவடிக்கைகள் சட்ட ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் […]