Police Department News

போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து ஏட்டுவை மிரட்டிய வாலிபர்

போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து ஏட்டுவை மிரட்டிய வாலிபர்

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் செம்புலிங்கம் வயது 45 இவர் அந்த பகுதியில் பெல்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செம்புலிங்கம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு செந்தில்குமார் என்பவரிடம் எங்களுடைய தெருவில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. எனவே அதனை உடனடியாக சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு ஏட்டு செந்தில்குமார் நீங்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுங்கள் என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த செம்புலிங்கம் தனது செல்போனை கீழே போட்டு உடைத்து அதில் இருந்த கூர்மையான பகுதியை எடுத்து போலீஸ் ஏட்டுவை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசினார். இது குறித்து ஏட்டு செந்தில்குமார் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செம்புலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.