
மதுரை செல்லூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் கஞ்சா கடத்தியவரை விரட்டி பிடித்த காவலருக்கு போலிஸ் கமிஷனர் பாராட்டு
நேற்றிரவு (27.04.2025) செல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதைப்பொருள் தடுப்பு சரக ரோந்து அலுவலின் போது, இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருத்து 5 கிலோ 310 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு. சக்திகணேசன் மற்றும் மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் திரு.கண்ணதாசன் ஆகிய இருவரையும் பாராட்டும் வகையில், மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். இ.கா.ப., அவர்கள் இன்று (28.04.2025) நேரில் அழைத்து பாரட்டுச்சான்றிதழ் மற்றும் பணவெகுமதிகள் வழங்கி தனது வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுக்களை தெரிவித்தார்.
