Police Department News

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதார இணை இயக்குநர் டாக்டர் .சாந்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது..
உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக காசநோய் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.
நுரையீரலில் ஏற்படும் நுண்ணுயிர் தொற்று காரணமாகவும், பொது இடங்களில் எச்சில் துப்புவதாலும் காசநோய் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது.
காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்புமூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பகுதிகளிலும் நோயுண்டாக்கி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே பொதுமக்கள் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள எதிர்ப்பு சக்திகள் அதிகமுள்ள சத்தான சிறுதானிய உணவுகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் அனைவரும் காசநோய் ஒழிப்பு குறித்து உறுதி மொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம். காசநோய் ஒழிப்பு திட்ட துனை இயக்குநர் மருத்துவர். ராஜ்குமார், நுரையீரல் சிறப்பு மருத்துவர். செந்தில்குமார், மருந்தாளுநர் முத்துசாமி, பயிற்சி செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.