Police Department News

சாலைகளில் வேகத்தடைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?

சாலைகளில் வேகத்தடைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?

சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க விதி என்ன சொல்கிறது?
இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, “தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்’ என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, “போக்குவரத்து பொறியாளர்கள் குழு’ கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
டிரக்குகள், பேருந்துகள், பெரிய “வீல் பேஸ்’ கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
“டி’ அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published.