Police Department News

மதுரைகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மதுரை
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் மில்கேட் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அந்தப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விஷேச நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது உண்டு.

சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெய கஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் உண்டியல் அருகே நின்று பணத்தை திருடும் காட்சி பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்தப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து சென்று குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.