மதுரை சமயநல்லூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் கைது, தனிப்படையின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நவடிக்கையெடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் மேலும் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைககள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் வாடிப்பட்டி பாலமேடு சோழவந்தான் அலங்காநல்லூர் காவல் நிலைய சரகங்களின் அடுத்தடுத்து பல்வேறு நாட்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு போனது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி. நித்திய பிரியா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையின் தீவிர முயற்சியால் மேற்படி வழக்கின் எதிரி தருமபுரி மாவட்டம் பிடமனேரி கிராமத்தை சேர்ந்த முகமது அலி வயது 37/22, என்பவரை கடந்த 4 ம் தேதி கைது செய்து மேற்படி வழக்குகளில் 17 அரை சவரன் தங்க நகைகளை எதிரியிடமிருந்து கைபற்றப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாவட்டத்தில் திருட்டு சம்பவ குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்