

மதுரை பென்மேனி பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரை பொன்மேனி பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 37. பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் மாடி அறைக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
