பணம் கையாடல் செய்த தமிழ் நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அரசு அலுவலர் கைது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பணம் ரூபாய்1,63,843,65/- ஐ -கையாடல் செய்த அரசு அலுவலர் கைது
சென்னை,TTDC அலுவலகம் வாலாஜா ரோடு சென்னை என்ற இடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் K.S ஹரிஹரன் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்ததாகவும், அவர் TTDC யின் வரவு செலவு மற்றும் வங்கி பணி வர்த்தனைகளை கவனித்து வந்தவர், தன்னுடன் பணிபுரிந்த மேலாளர் திரு .சைமன்.கே .சாக்கோ என்பவர் இறந்து போன பிறகு அவருடைய கையொப்பத்தை TTDC யின் வங்கி காசோலைகளில் போலியாக போட்டு அதனை ஹரிஹரன் தன் பெயரிலுள்ள கணக்கிற்கு மாற்றி பணம் ரூபாய் 1,63,84,365/-கையாடல் செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி TTDC யின் முதன்மை நிதி அலுவலர் திரு .கணேஷ் கார்த்திகேயன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு சங்கர் ஜீவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் திருமதி. மகேஸ்வரி இ.கா.ப கூடுதல் காவல் ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவு, அவர்களின் அறிவுறுத்தலின், பேரிலும் மத்திய குற்றப்பிரிவு,EDF-1, காவல் உதவி ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளரின் தலைமையில் தலைமறைவாக இருந்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த எதிரி K.S ஹரிஹரன், என்பவரை 08.10.2022 அன்று கைது செய்து கனம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம், எழும்பூர், அவர்களிடம் 09.10.2022 அன்று ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.