
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டுத்துப்பாக்கி வைத்து வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டு துப்பாக்கி வைத்து விலங்குகளை வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவற்றை அவ்வப்போது சிலர் வேட்டையாடுகின்றனர். ஆவியூர் எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் காரியாபட்டி குரண்டி பகுதியில் ரோந்து சென்ற போது துப்பாக்கி சத்தம் கேட்டது.
சோதனை செய்த போது குரண்டியைச் சேர்ந்த பாலமுருகன், புல்லுாரைச் சேர்ந்த சிவன், சோனை நாட்டு துப்பாக்கி வைத்து வேட்டையாடியது தெரிந்தது.
துப்பாக்கியை கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர்.
