
மதுரை உசிலபட்டியில் கல்லூரி மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கான ஊர்வலத்தை தாளாளர் பாண்டியன் துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜோதிராஜன், கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பொன்மீனா, எஸ்.ஐ., கார்த்திகேயன், என்.சி.சி.,அதிகாரி ராஜசேகரன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, ரவிச்சந்திரன், பிரேமலதா, திருச்செல்வி பங்கேற்றனர்.
சைபர் கிரைம் குறித்து 1930 என்ற இலவச அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
