
கனிமவளதுறை மூலம் 11ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6.55 கோடி நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட பொதுமக்கள் கோரிக்கை .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள எர்ரணஹள்ளி, நல்லூர், சூடானூர், ஜெர்த்தலாவ், புலிகரை, கரகதஹள்ளி, பி.கொல்லஹள்ளி, சோமனஹள்ளி, அ.மல்லாபுரம், செல்லியம்பட்டி, உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள நொரம்பு, கல், மண், போன்றவற்றை பொது உபயோகத்திற்கு விற்றது மற்றும் குவாரிகள் டெண்டர் மூலம் பெறப்பட்ட வருவாயில் 75 சதவீதம் சம்மந்தபட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறை வசதி ஏற்படுத்தவும், குடிநீர் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தவும் மீதமுள்ள 25 சதவீதம் மேற்கண்ட குவாரிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 6 கோடி 55 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜீன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் எவ்வளவு பணிகள் நடைப்பெற்றுள்ளது, பாதிக்கப்பட்ட கிராமத்திற்க்கு நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகள் என்ன என்ற கேள்விற்க்கு நிதி செலவினங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றும், கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பினால் அடக்கு முறையை கையாளுவதாகும் எனவே மாவட்ட நிர்வாகம் இந்த இந்த நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
