




மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள்-2022” – கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற “காவலர் வீரவணக்க நாள்-2022” -ல் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிக்க வழங்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் அவர்களின் அறிவுரைகளின்படி,
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ‘மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு” (The Role of Police in Development of State) என்ற தலைப்பின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை போட்டியும், ‘காவல் பணிகள்” (Police Duties) என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் நடைபெற்றது
அதன்பேரில், மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் (15.10.22)-ம் தேதி காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் நடைபெற்றது போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் மதுரை போக்குவரந்து காவல் ADCP திரு.திருமலைகுமார் அவர்கள் தலைமையிலும் விழா ஏற்பாடுகளை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
மேலும் நடைபெற்ற கட்டுரை போட்டியில் 5 பேர் பொதுமக்களும் மாணவர்கள் 10 பேரும் கலந்து கொண்டனர் ஓவியப் போட்டியில் 35 பேர் மாணவர்கள் கலந்து கொண்டனர் ஆக மொத்தம் 50 போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேற்படி கட்டுரை மற்றும் ஒவிய போட்டிகளில் மேற்பார்வையாளர்களாக மாட்டுத்தாவனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பஞ்சவர்ணம் அவர்களும் திருமதி சோபனா போக்குவரத்து திட்டப்பிரிவு அவர்களும் கலந்து கொண்டனர் இந்த கட்டுரை போட்டியில் தெப்பக்குளம் பகுதி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்களும் கலந்து கொண்டது சிறப்பு செய்தி
போட்டியில் வெற்றி பெற்ற சென் மேரிஸ் பள்ளி பிரகத்ஸ்சேனா தமிழ் கட்டுரை போட்டியிலும் சக்கிமங்கலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி இர்பானா தமிழ் கட்டுரை போட்டியிலும் வல்லபா வித்யாலயா பள்ளி மாணவி ஆங்கில ட்டுரை போட்டியிலும் சியோ மெட்ரிக்பள்ளி மாணவன் ஹரீம்வித்யால் ஆங்கில கட்டுரை போட்டியிலும் டிவியெஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் யஸ்வந்த் ஆங்கில கட்டுரை போட்டியிலும் சக்கிமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி மாணவி பிரியதர்ஷினி ஓவிய போட்டியிலும் மேலூர் அரசு நடு நிலை பள்ளி மாணவன் நித்தீஸ் ஓவிய போட்டியிலும் மெஜூரா காலேஜ் மாணவி பூர்ணிமா ஓவிய போட்டியிலும் டிவியஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சுதர்சன பார்கவி ஓவிய போட்டியில் விஷேச பரிசையும் வென்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் மதுரை மாநகர காவல் ஆணையகரம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் காவல்துறைதென் மண்டல தலைவர் திரு. அஸ்ரா கார்க் அவர்கள் பாராட்டு சான்றுகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர்
