
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்க 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கு காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்க்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றத்தடுப்பு போலீசார் இரவு ரோந்து பணிக்கு செல்கின்றனர் இது தவிர ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை போலீசாரும் இரவு பணிக்கு அனுப்பப்படுகின்றனர்
இரவு பணியில் ஈடுபடும் காவலர்கள் அனைவருக்கும் மாதம் 300 ரூபாய் சிறப்பு படியாக வழங்க 42.22 கோடி ரூபாய் ஒதுக்கும்படி டிஜிபி கருத்துரு அனுப்பினார்.
அதை பரிசீலனை செய்த அரசு இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாதம் 300 ரூபாய் சிறப்பு படி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.
