
காவல் நிலையங்களில் புகார்தாரர்களுக்கு ராஜமரியாதை தினமும் மக்களிடம் போலீஸ் கமிஷனர் கருத்து கேட்பு
தமிழகத்தில் முதன்முறையாக கடந்த அக்டோபர் மாதம் 10 ம் தேதி மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கவும் காவல் நிலையத்தில் காத்திருப்பை தவிர்க்கவும் கிரேட் சிஸ்டத்தை காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் அறிமுகப்படுத்தினார். காவல் நிலையத்தில் வரவேற்பாளரிடம் மனு கொடுக்கும் போது அதை கணினியில் பதிவு செய்தவுடன் சர்வர் மூலம் அதை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறியலாம்.
புகார் கொடுத்த மறு நாள் புகார்தாரரை கமிஷனர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து கேட்கிறார்கள்
அவரது பதிலை பொறுத்து 3 பிரிவுகளில் பதிவு செய்து போலீசாரின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக மதிப்பெண் வழங்ப்படுகிறது.
மதிப்பெண் குறைவாக இருக்கும் காவல் நிலைய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகார்தாரர்கள் கண்ணியமாக நடத்தப்படுவது உறுதி செய்யப்படும் இதன் காரணமாக தற்போது போலீசாரின் அணுகுமுறை முற்றிலும் மாறியுள்ளது இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் வசந்தா கூறுகையில் தினமும் சராசரியாக 50 க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப்படுகின்றன.
இது குறித்து விபரங்கள் எங்களுக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் பேசி போலீசாரின் நடவடிக்கைககள் குறித்து கேட்டு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறோம்
புகார்தாரர்களில் பலர் புகார் கொடுத்த அன்றே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்களுக்கு சட்ட நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்
போலீசாரின் அணுகுமுறை சரியில்லையென்றால் உடனடியாக பொதுமக்கள் 0452-2344989, 78068 60806 ல் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
