
மதுரையில் தேவர் ஜெயந்தியன்று வாகனங்களில் தாறுமாறாக சென்றோரை காவல்துறையினர் காமிரா மூலம் கண்காணிப்பு
மதுரையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் வாகனங்களில் செல்லும் நபர்கள் வாகனங்களுக்கு வெளியே நின்றுகொண்டு செல்லும் நிலை காணப்பட்டது.
தேவர் குருபூஜையை முன்னிட்டு வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களின் வெளியே நின்று கொண்டோ வெளியில் தெரியும்படி உட்கார்ந்து கொண்டோ செல்லக் கூடாது என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டும் பலர் வாகனங்களில் வெளியில் நின்று கொண்டும் வாகனங்களை தாறுமாறாவும் செல்லுவதை பார்க்க முடிந்தது.
இப்படி செல்பவர்களின் வாகனங்களை காவல்துறையினர் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்
