மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் ஆலோசனைப்படி புது முயற்சியாக பெட்டிசன் மேளா நடைபெற்றது மதுரை சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகள் நேரடியாக மனுக்கள் மூலம் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக மதுரை வசந்தநகர் J.R.T. திருமண மகாலில் துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத், உதவி ஆணையர் திரு.ரமேஷ் ஆகியோர் தலைமையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.பொதுமக்கள் ஆவலுடன் இக்குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு ஒரே நாளில் தங்கள் குறைகளின் மீது தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் காவல் துறையினரை பாராட்டி சென்றனர்.இம் முகாம் குறித்து சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர்
கலைவாணி அவர்கள் கூறியதாவது மதுரை மாவட்டத்தில் பொது மக்கள் கொரோனா என்னும் கொடிய நோய் அச்சத்தினால் வீட்டை விட்டு வெளியேற அச்சப்பட்டு பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இச் சூழலில் அவர்களின் குறைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து அலைய கூடாது என்பதை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட காவல் துறை ஆனையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் ஆலோசனைப்படி சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு செய்து துணை ஆணையர் சிவப்பிரசாத் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்தச் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி என கூறியதுடன் மதுரை மாவட்ட காவல் ஆனையருக்கும் காவல் துறையினருக்கும் நன்றி கூறியுள்ளனர்.
மேலும் இக்குறைதீர்க்கும் முகாமுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
