
மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
தல்லாகுளம் போலீசார் ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே ரோந்து சென்றனர். இளையோர் விடுதி அருகே மோட்டார் சைக்கிளில் 3பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா, ரூ.31 ஆயிரத்து 200, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் மேற்கண்ட இருவரும் வலையப்பட்டி தவமுருகன் மகன் கார்த்திகேயன் என்ற கவுதம் கார்த்திக் (22), ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் ராஜா தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் பாரி ஆனந்தன் (22) என்பது தெரியவந்தது. 2பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஆனையூர் சாந்தி நகரை சேர்ந்த ஜாக்ஆலிவரை தேடி வருகின்றனர்.
கரிமேடு போலீசார் காளவாசல் பகுதியில் ரோந்து சென்றனர். ராஜீவ் காந்தி தெருவில் கஞ்சா விற்பது தெரியவந்தது. அங்கு பாண்டி என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். பாத்ரூம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து நேதாஜிரோடு கிளாஸ்கார தெருவை சேர்ந்த ஜானகிராமன்(57) என்பவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய சிவகுமார் மனைவி ஆனந்தியை தேடி வருகின்றனர்.
