
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார் .
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தொட்டம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 45) இவர் நேற்று மாலை சித்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்
அப்போது எதிரேவந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் இவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர்மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவலிங்கம் பலியானார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
