
மகேந்திரமங்கலம் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி சாவு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே போடரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது .40)
இவருக்கு பொன்னியம்மாள் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் வைத்தியம் பார்த்தும் இவரது தலைவலி நீங்கவில்லை, இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு மனைவியிடம் தனக்கு தாங்க முடியாத அளவிற்க்கு தலைவலி அதிகமாக உள்ளதாகவும் அதனால் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்,
அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
