
தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்
திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான ரூபாய் 30,000/- மதிப்பிலான இருக்கைகள் மற்றும் உபகரணங்களை திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் 22.12.2019 அன்று வழங்கினார்.