
தர்மபுரி நகர்புற நக்சல்கள் குறித்து தர்மபுரி மாவட்ட விஏஓக்களுக்கு அதிரடிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் அவர் பயிற்சி அழைத்தார்..
தர்மபுரி வருவாய் கோட்ட அளவில் நகர்புற நக்சல்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி நேற்று தர்மபுரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. பயிற்சி யை கலெக்டர் நேர்முக உதவியாளர் பழனிதேவி துவக்கி வைத்து பேசினார். அதிரடிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் பயிற்சி அளித்தார். பயிற்சியில், அதிரடிப்படையின் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்கள் பிரச்னைகளில் ஈடுபடும் புரட்சி இயக்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை கண்காணிக்க வேண்டும். இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனில், அது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடிப்படை சார்பில் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நகர்புற நக்சல்களை கண்டறிதல் மேலும், அவர்களது அன்றாட நடவடிக்கைகளை விஏஓக்கள் கண்டறிந்து அது குறித்து மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள நக்சல்களுக்கு என நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில், தாசில்தார்கள் ராஜராஜன், அசோக், ஆறுமுகம், சுகுமார், கேசவமூர்த்தி மற்றும் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, நல்லம்பள்ளி, பெள்ளாகரம், பாலக் கோடு, காரிமங்கலம் தாலுகாக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்து கொண்டனர்.
