
தர்மபுரியில் பஞ்சப்பள்ளியில் சிக்கிய 410 கிலோதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா பறிமுதல்..
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்ட அள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மினிவேனில் 410 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா ஆகியவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினி வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
