Police Department News

திருமணமான இளம்பெண் தற்கொலை .சார் ஆட்சியர் விசாரனை

திருமணமான இளம்பெண் தற்கொலை .சார் ஆட்சியர் விசாரனை

தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே சீங்கேரி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி சவுந்தர்யா (வயது. 23), திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் குடும்ப தகராறின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி ஒரே வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.