தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே
கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல். குற்றப்புலய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில்…
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி, பறக்கும் படை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் மேற்கொண்ட கூட்டுச் சோதனையில் நல்லம்பள்ளி வட்டம், தம்மனம்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு 21 மூட்டை ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேற்படி கைப்பற்றப்பட்ட ஒரு டன் ரேசன் அரிசியை கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தர்மபுரி கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பதுக்கலில் தொடர்புடைய தலைமறைவான உங்கரானஅள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் த/பெ கிருஷ்ணன் என்பவர் மீது குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர் மேலும் இது போல் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியே விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களுடைய குடும்ப அட்டை தடை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.