Police Department News

மதுரை வைகையாற்றில் அடைப்புகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு

மதுரை வைகையாற்றில் அடைப்புகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு

மதுரை வைகையாற்றில் ஆகாயத்தாமரைகள் அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது.

செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் இருந்த அடைப்புகளை அகற்றினார். இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையில் தண்ணீர் வடிந்தது. இதனை கேள்விப்பட்ட மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ஏட்டு ராமனை நேரில் வரவழைத்து பாராட்டினார். துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.