


மதுரை தெப்பக்குளம் B3 காவல் நிலையத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களை காவல் நிலையம் அழைத்து அவர்களுடன் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பேச்சு போட்டி நடத்தி அவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள் சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா நிகழ்வுகள் நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.க ளுக்கு தமிழ்நாடு டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் இதனை தொடர்ந்து மதுரை போலீஸ் கமிஷனர் திரு. செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தளின்படி மதுரை தெப்பக்குளம் B3 காவல் நிலையத்தில் நிலைய காவல் ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் தலைமையில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது
இதில் அமலி பெண்கள் மேல் நிலை பள்ளி நிர்மலா மேல் நிலை பள்ளி சௌராஸ்ரா மேல்நிலை பள்ளி மீனாட்சி மகளீர் பள்ளிகளை சேர்ந்த 100 மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமை தடுப்பு சம்பந்தமாக பேச்சு போட்டிகள் கட்டுரை போட்டிகள் நடை பெற்றன அதில் முதலிடம் பெற்ற 3 மாணகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
