
ஓட்டுனர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைக்க முடியுமா?
வாகன ஓட்டிகளிடமிருந்து சில சூழ்நிலைகளில் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்யலாம்
மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 183 ன் கீழ் அதி வேகமாக ஓட்டினால்
மோட்டார் வாகனச்சட்டம் 184 ன் கீழ் அபாயகரமாக ஓட்டினால்
மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 185 ன் கீழ் மது அருந்தி வாகனம் ஓட்டினால்
மோட்டார் வாகனச்சட்டம் 189 ன் கீழ்
காரையோ பைக்கையோ சட்ட விரோதமாக ரேஸ் செய்தாலோ
மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 190 ன் கீழ்
வண்டி சரியான கண்டிசனில் இல்லை என தெரிந்தே வாகனத்தை இயக்கும் போதோ
மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 194 C ன் கீழ்
ஒரு வண்டியில் டிரைவரை சேர்க்காமல் மூன்றோ நான்கு பேரோ பயனிக்கலாம் என்ற நிலையில் அதிக நபரோடு அதி வேகமாக பயணிக்கு போதோ
மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 194 D ன் கீழ்
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் போடாமல் அதி வேகமாக ஓட்டினால்
மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 E ன் கீழ்
அவசர ஊர்திகளுக்கு அதாவது ஆம்புலன்ஸ் தீயணைப்பு போன்ற ஊர்திகளுக்கு வழி விடாமல் சென்றால்
உங்கள் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்யலாம்.
