Police Department News

பாலக்கோட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

பாலக்கோட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சக்திகைலாஷ் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியான டி.எஸ்.பி சிந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தக்காளிமண்டி, கடைவீதி, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, பைபாஸ் சாலை வழியாக ஊர்வலமாக சென்று பள்ளியை அடைந்தனர்.
ஊர்வலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், பெண்களை இழிவாக பேசாதீர், வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் தவறு, பெண் சிசு கொலையை தடுப்போம், பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம், பெண் கல்வியை போற்றுவோம், வரதட்சனை கொடுப்பதும், வாங்குவதும் தவறு போன்ற வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.
இந்ந ஊர்வலத்தில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி, துணை ஆய்வாளர்கள் முருகன், ராகவி, கல்லூரி பேராசிரியர்கள் போக்குவரத்து காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.