
மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ஆலமரத்தை பாதுகாக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு
நமது நாட்டின் தேசிய மரம் ஆலமரம் இதற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு இது நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் தன்மை கொண்டது இப்படி நூற்றாண்டுகள் கண்ட ஆலமரம் ஒன்று மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ளது இந்த ஆலமரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடி இந்த ஆலமரத்திற்கு அந்த பகுதி மக்கள் மரியாதை செய்து வருகின்றனர்
இந்த ஆலமரத்தினை அழிவிலிருந்து காப்பாற்றி பாதுகாக்க வேண்டுமென்று ஆந்த பகுதியில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பொது நல அறக்கட்டளை கோரிக்கை வைத்துள்ளது இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் அபுபக்கர் மற்றும் நிர்வாகிகள் அருள்ஜோதி அண்ணாதுரை நேதாஜி கார்த்திகேயன் ஆகியோர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு.
மதுரை மீனாம்பாள்புரத்தின் அடையாளமாக அப்பகுதியில் நூற்றாண்டுகளை கடந்த இந்த ஆலமரத்திற்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் விழா எடுக்கப்படுகிறது. பல்லுயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்
இந்த மரம் உள்ள பகுதியின் வழியே உயர் அழுத்த மின் பாதை செல்வதால் மின் ஊழியர்கள் அவ்வப்போது இந்த மரத்தின் விழுதுகளையும் கிளைகளையும் வெட்டுகின்றனர் இதனால் அப்பகுதியின் வழியெ செல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்றியமைக்க உத்தரவிட்டு நூற்றாண்டுகளை கடந்த இந்த ஆலமரத்தை பாதுகாக்க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர் .
