
பாலக்கோட்டில் இ.பீட் ஸ்மார்ட் காவலர் செயலி – டிஎஸ்பி சிந்து தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் பள்ளியில் தமிழக அரசு குற்றசம்பவங்களை தடுக்க இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தினார் . இதையடுத்து பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் , காரிமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 119 காவலர்களுக்கு இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலி பயன்படுத்துவது குறித்து டிஎஸ்பி சிந்து தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் காவலர்கள் ரோந்து செல்லும்போது எளிதில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலின் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் விதமாக வடிவமைக்கப்பட்டதின் பெயரில் சந்தேக நபர்கள் போட்டோ ஒப்பிடுதல், வாகனங்கள் திருட்டு, சீனியர் சிட்டிசனுக்கு உதவி, பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறிதல் என பல்வேறு அம்சங்களுடன் இரவில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடும் போது இருக்கும் இடத்திலிருந்து கொண்டே குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் தவமணி ,ஜாபர் உசேன், வெங்கட்ராமன், வீரம்மாள் மற்றும் குற்ற தடுப்பு பிரிவு பயிற்சி காவலர் உள்ளிட்ட திரளான காவலர்கள் கலந்து கொண்டனர்.
