Police Department News

மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு

மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு

மதுரை மாநகர், திலகர் திடல் C4, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சிம்மகல்லில், உலக பிரசித்தி பெற்ற பழைய சொக்கநாதர் ஆலயம் உள்ளது. இது மதுரை மீனாட்சியம்மன் கோவில் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட மிக பழைமையான பிரசித்தி பெற்ற ஆலயம். இங்கு கடந்த 29 ம் தேதி சாமி தர்ஷணம் செய்ய வந்த பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அங்கு வந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை நூதனமான முறையில் திருடியுள்ளனர். இந்த தகவலை கோவில் ஊழியர்களிடம் சொன்னதும் அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் உடனே கோவில் கதவை இழுத்து மூடிவிட்டு கோவில் உள்ளே இருந்த அனைத்து பெண்களையும் ஒவ்வொருவரையும் சோதனை செய்து பார்த்த போது நாகபட்டினத்தை சேர்ந்த சாவித்திரி, மற்றும் சாந்தி எனற இருவரும் கூட்டாக சேர்ந்து இந்த சங்கிலியை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களை திலகர் திடல் C4, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அங்கு குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சுஜாதா அவர்கள் விசாரணை நடத்தி, அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.