
இலக்கியசுடர் விருது பெற்ற காரியாபட்டி சார்பு ஆய்வாளர்
மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறு வயது முதலே ஒரு கவிஞனாய், எழுத்தாளனாய் மாற பல முயற்சிகள் செய்தும் உபயோகிக்கப்படாத ஒருவனாகவே இருந்தேன்.
கல்லூரி காலத்தில் கூட ஒரு கவிதை புத்தகம் எழுதி , பெரு முயற்சிக்குப் பின் வெளியிடப்பட்டது. இருப்பினும் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. காலப்போக்கில் முயற்சிகள் முயற்சிகளாகவே போய்க்கொண்டிருந்தன.
பேஸ்புக் தளம்
கருத்துக்களை பரிமாறும் களமாக மாற்றிக் கொண்டேன்.
இந்த தளம் என்னுடைய எழுத்துக்களை பல வாசகர்களிடம் கொண்டு சென்றது.
என் எண்ணங்களை வாசித்தவர் பலர்,
நேசித்தவர் சிலர், விமர்சித்தவர் சிலர்,
நகைத்தவர் சிலர் ,அந்த நேசித்த சிலருக்காக எண்ணங்களை தளத்தில் பதிவிட்டேன் .
விமர்ச்சித்த சிலருக்காக என்னை பக்குவப்படுத்தி கொண்டேன்.
அதன் பயனாக சமீபத்தில் நடந்த கிராமிய கலை வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று இலக்கியசுடர் என்ற விருது ஓர் இலக்கியவாதியிடம் இருந்து பெற்றது.
பெரும் மகிழ்ச்சி ….
நன்றிகள்
முனைவர். மணிவண்ணன் ரவிச்சந்திரன் , கருப்பையா மற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும்…
