மதுரை, வில்லாபுரம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படு கொலை, மர்ம கும்பல் தப்பி ஓட்டம், போலீசார் தேடி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மகன் பாரதி வயது 22/2020, இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று (20/10/20) மதுரை, கீரைத்துரை B4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வில்லாபும், பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பழைய வீட்டில் பிளம்பிங் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வீட்டிற்குள் வைத்து சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர காவல் துறை துணை ஆணையர் திரு. பழனிகுமார் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார், மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு,அதன் உதவியுடன் கீரைத்துரை B4, காவல் நிலைய ஆய்வாளர் திரு மணிகண்டன் அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.
இது மட்டுமல்லாமல், சம்பவ இடத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரபகபடுத்தப்பட்டுள்ளன.
இறந்த பாரதியின் உடலை உடல் கூறு ஆய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவ மனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
உடல் கூறு ஆய்விற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கீரைத்துரை B4, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
