20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக டிஜிபி Dr.அபாஷ்குமார்,IPS நியமிக்கப்பட்டுள்ளார்
ஊர்க்காவல் படை தலைமை கமாண்டண்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை டி.ஜி.பி. அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் சரக டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாக சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் காவல்துறை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜியாக ஆர்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் பிரிவில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக எம்.ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜியாக இ.எஸ் உமா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக அர.அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாக எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.ஸ்டிபன் ஜேசுபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக உள்ள கலைச்செல்வன் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை சிபிசிஐடி எஸ்.பி.யாக உள்ள முத்தரசி தஞ்சை மாவட்ட காவல் கண்காணீப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தஞ்சை எஸ்.பி.யாக உள்ள ரவுளி பிரியா கந்தபுன்னே சென்னையில் சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து துணை ஆணையராக ஏ.ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக Dr.R.சிவக்குமார் என 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.