
வாகனம் மோதி இளம்பெண் சாவு
மதுரை-திருச்சி 4 வழிச்சாலை கூத்தப்பன்பட்டி பகுதியில் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று இரவு நடந்து சென்ற இளம்பெண் மீது நாகர்கோவிலில் இருந்து திருச்சி சென்ற மினி வேன் மோதி சென்றது. இதில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். அந்த இடத்தில் நிற்காமல் சென்ற மினி வேன் டிரைவர் திருச்சி முண்டூரை சேர்ந்த இருதயராஜ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கலா சேகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
மேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
