
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள், அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி செங்கோட்டை காவல் நிலையத்தில் வாகன தணிக்கையின் போது 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களை வரச் சொல்லி தக்க அறிவுரைகள் வழங்கி இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மற்றும் குடிப் போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் செங்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்களால் அறிவுரை வழங்கி அனுப்பப்பட்டது.
