
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் பலி
திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது டி. கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார்.
இரவு பணி என்பதால் டி.கல்லுப்பட்டி செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லுப்பட்டிக்கு சென்றுள்ளார். பஸ்சில் இடமில்லாததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.
அந்த பஸ் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியை அடுத்த தனியார் மருத்து வமனை அருகில் உள்ள வளைவில் திரும்பும் போது படிக்கட்டில் அமர்ந்திருந்த ராஜா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தி பார்த்த போது ராஜா தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
