


பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் மாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராம ஊர் கவுண்டர்கள் இணைந்து நடத்திய பாராட்டு நிகழ்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வாங்கரை கிராமம் ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்ற மாங்கரை எருது விடும் திருவிழாவில் மாங்கரை ஆனைக்கல்லனுர் மோட்டுபட்டி நூலஹள்ளி குள்ளாத்திரம்பட்டி கொட்டாவூர் பிள்ளபட்டி ஆகிய ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து மொத்தம் ஒன்பது எருதுகள் விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழா மேற்குறிப்பிட்ட ஏழு கிராமங்களில் ஊர் கவுண்டர்கள் சார்பாக நடைபெற்றது வழக்கமாக இவ்விழாவில் ஆண்டுதோறும் ஏதேனும் சிறு பிரச்சனைகள் நிகழ்வது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு எந்த ஒரு சண்டை சச்சரவுகள் இன்றி சீரும் சிறப்புமாகவும் அமைதியாகவும் உரிய பாதுகாப்புடன் இவ்விழாவை நடத்திக் கொடுத்த பென்னாகரம் காவல் ஆய்வாளர் மற்றும் இதர காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பெண்ணாகரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் நேரில் சென்று டிஎஸ்பி திரு இமயவர்மன் மற்றும் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போற்றி நன்றி தெரிவித்தனர் இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி அவர்கள் ஊர் முக்கியஸ்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொன்னாடை போற்றியது குறிப்பிடத்தக்கது
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக..
டாக்டர்.மு. ரஞ்சித் குமார்
வெற்றி மற்றும்
சங்கீதா நாகராஜ்.