
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தியாகராஜர் கல்லூரி என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் 50 நபர்கள் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹெல்மெட் பேரணி நடத்தினர் இதனை மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைத்தார்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு பேரணி தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலை குருவிக்காரன் சாலை முனிச்சாலை கீழவாசல் சென்மேரிஸ் ஜங்ஷன் குயவர் பாளையம் ரோடு சிமெண்ட் ரோடு அனுப்பானடி தெப்பக்குளம் கல்லூரியில் வந்து முடிவடைந்தது.
