


“சாலை விதிகளை மதித்து விலைமதிப்பில்லா உயிரை காப்போம்”விழிப்புணர்வு முகாமில் சிறப்பு விருந்தினராக திரு.R.சக்திவேல் (போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் தெற்கு )அவர்கள் மற்றும் திரு.ரவிச்சந்திரன் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது.
J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட 200 அடி ரேடியல் சாலையில் உள்ள “Green Acres” குடியிருப்போர் நல சங்கம், துரைப்பாக்கம் வணிகர் சங்கம் மற்றும் துரைப்பாக்கம் Auto and Call Taxi ஓட்டுநர் சங்கம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வில் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட
துரைப்பாக்கம் to 200 அடி ரேடியல் சாலை,
ECR பாண்டியன் சாலை to OMR இணைப்பு சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தினம்தோறும் அதிகமாக இருப்பதால் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.R.சக்திவேல் (தெற்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்ற மற்றும் திரு.ரவிச்சந்திரன்( J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்) அவர்கள் சார்பில் சிறப்பான விழிப்புணர்வு மூலம் கலந்து கொண்ட மக்களின் குறைகளை கேட்டுக் அவர்களுக்கு ஏற்றவாறு சாலையில் சிரமமின்றி செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் மற்றும் அதை பற்றிய மக்களுக்கு சொன்ன விழிப்புணர்வு என்னவென்றால் மெட்ரோ பணி நடைபெற்று வரும் சூழ்நிலையில் அனைத்து வாகனமும் குறுகிய சாலையை கடக்க வேண்டி இருப்பதால் சர்வீஸ் சாலையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றி வாகனங்கள் பிரித்து சிரமமின்றி செல்ல வழிவகுத்துள்ளனர்.பள்ளி குழந்தைகள் வாகனங்களை ஒட்டகூடாது என்றும், குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது என்றும், அனைவரும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டகூடாது என்றும் சாலை ஓரமாக உள்ள குடியிருப்புகளுக்கு CCTV பொருத்தவேண்டும் என்றும், குறிப்பாக விபத்து ஏற்படும் இடத்தில் காவலர்களை பணியில் அமர்த்தி விபத்தை தவிர்க்கின்றனர்.
விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட ஒவ்வொன்றும் சாலை விதிமுறைகளை பற்றிய உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை சிறப்பாகக் நன்றி கூறி நிறைவு செய்தனர்.
‘உறுதிமொழி ‘
நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!
பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!!
விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!!
சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!
கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!
வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!
தலைக்கவசம் அணிவோம்! சீட் பெல்ட் அணிவோம்!!
படியில் பயணம்! நொடியில் மரணம்!!
இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!
போதையில் பயணம்! பாதையில் மரணம்!!
வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!!
வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!!
தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!!
சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!!
முறையான இயக்கம்! முத்தான பயணம்!!
பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!!
விதி மீறாமல் ஓட்டுவோம்!
விதி மீறுபவர்களையும் வீழ்த்தாமல் ஓட்டுவோம்!!
பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!!
சாலையில் கவனமாக ஓட்டுவோம்! சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டுவோம்!!
பொறுமையுடன் ஓட்டுவோம்! பொறுமை இல்லாதவர்களையும் காப்போம்!!
அனுசரித்து ஓட்டுவோம்! அனைவரையும் காப்போம்!!
சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம்! சண்டைக்காரர்களையும் திருத்துவோம்!!
எதிர்பார்த்து ஓட்டுவோம்! எந்த சூழலிலும் காப்போம்!!
மனமே கவனம்! மனது அறியாததை கண்களும் பார்ப்பதில்லை! காதுகளும் கேட்பதில்லை!! மூளையும் உணருவதில்லை!!!
மன நலமும், உடல் நலமும் உயிருள்ளவரை அழியாத சொத்து!
மது, போதை, புகைப் பழக்கத்தை விட்டொழிப்போம்! மனதையும் உடலையும் காப்போம்!!
சாலைவிதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!!
சாலை பாதுகாப்பு! சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!!
சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!!
வாகன அறிவும், சாலை அறிவும்! வாழ்நாள் பாதுகாப்பு!!
புத்தாக்கப்பயிற்சி பெறுவோம்! புதுப்பித்தல் கல்வி பெறுவோம்!!
பொது வாகனத்தை பயன்படுத்துவோம்! தனி வாகனத்தை தவிர்ப்போம்!!
காவலர்கள் நமக்கு தோழர்கள்! மதிப்போம் மனித நேயம் காப்போம்!!
முதலுதவியை முக்கியமாக கற்போம்!!
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு, விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியம்!!
ஓய்வின்றி ஓட்டாதீர்! உயிருடன் வாழ்வீர்!!
ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்! ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்!!
இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்! வாழ்நாளை நீட்டிப்பீர்!!
தலைக்கவசம் தன்னுயிர் காக்கும்! தன்னுயிர் தன்னுறவு காக்கும்!!
போதையில் வாகனம் ஓட்டுவது! பயணிகளுக்குத் தகனம் காட்டுவது!!
போதையில்லா வாகன ஓட்டுதல்! விபத்தில்லாப் பாதையைக் காட்டுதல்!!
சாலை விதிகளை மதிப்போம்! சந்தோசமான பயணத்தைக் கொடுப்போம்!!
சாலை விதிகளை மதிப்போம்! வரும் சங்கடங்களைத் தடுப்போம்!!
சாலை விதிகள் சாவைக் குறைக்கும் சக்திகள்!!
விபத்தைத் தடுக்கலாம் விதிகளை மதித்தால்!!
