
7 ஆண்டு தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது
கடந்த 7ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து வந்த பிடியானை குற்றவாளி செல்வராஜு என்பவரை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் தலைமையில் காவலர்கள் திரு மரிய ராஜா சிங்
திரு. அல்போன்ஸ் ராஜ்,
திரு கணேஷ் குமார் ஆகியோர் களவு வழிப்பறி கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கீழப்புதூர் ஊரைச் சேர்ந்த செல்வராஜ் வயது 50/25 , த/பெ பாண்டியராஜன் என்பவரை கோயம்புத்தூரில் வைத்து பிடித்து அழைத்து வந்து செங்கோட்டை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் இந்த செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
