
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு செல்லூர் போலீசார் நடவடிக்கை
மதுரை ஆனையூர் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது30). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கே.வி.சாலையில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி, 4500 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக செல்வ ராஜ், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது அருள்தாஸ்புரம், பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் சேக் என்ற ஜெயக்குமார்(24) மற்றும் தினேஷ் என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

