பொய்யான வீடியோக்ள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் கும்பலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு தமிழக டி.ஜி.பி.,அதிர்ச்சி தகவல்
வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு கோவை எஸ்.பி.,அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
அவர் கூறியதாவது:
வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பரவிய பொய்யான செய்திகள் அவற்றால் ஏற்பட்ட பீதி குழப்பத்தை பக்குவமாக கையாண்டு இயல்பு நிலை திரும்ப உதவிய தொழில் நிறுவனத்தினர்களுக்கு பாராட்டுக்கள்.
தற்போது ஓரளவிற்கு நிலைமை சரியாகி விட்டது எனினும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது
இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இன்னும் சிலரை கைது செய்ய போபால் பெங்களூரு பாட்னா டில்லி ஆகிய இடங்களில் தமிழக போலீசார் முகாமிட்டுள்ளனர் சமீபத்தில் தாம்பரத்தில் ஒருவர் தாக்கப்பட்டதாக பொய்யான வீடியோ வெளியிட்டனர் இதில் தொடர்புள்ள சில நபர்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருக்கிறது விசாரணையில் முழுமையான விபரங்கள் வெளிவரும்
இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது சம்பத்தப்பட்ட மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச வசதியாக அந்தந்த மொழியறிந்த IPS அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த அதிகாரிகள் மாநில அரசுகளுக்கு பாலமாக இருந்து செயல்படுவார்கள் என்றார்.
மேற்கு மண்டல ஐ.ஜி , சுதாகர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் டி.ஐ.ஜி.,கள் விஜயகுமார் ராஜேஸ்வரி காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.