சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தினார்.
இன்று 17.03 .2021 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள். கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து சந்திப்புகளில் தணிக்கை செய்தார்கள். அண்ணா சாலை ஸ்பென்சர் போக்குவரத்து சந்திப்பில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அருகிலுள்ள விழிப்புணர்வு முகாமில் தகுந்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கி முக கவசங்களை வழங்கினார். முககவசங்கள் வைத்திருந்து அணியாதவர்களுக்கு உரிய அவசியத்தை வலியுறுத்தி முககவசங்களை அணியச் செய்தார். பின்னர் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் என ஆய்வு செய்து முகக் கவசங்கள் அணியாத பொதுமக்களிடம் முகக்கவசம் அணிதல் மற்றும் கொரோனோ தடுப்பு அறிவுரைகளை வழங்கியும், வணிக நிலைய பொறுப்பாளர்களுக்கு வணிக வளாகங்களில் கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை பராமரிப்பதின் அவசியத்தையும் அறிவுறுத்தினார்.
சென்னை பெருநகர காவல் சரகத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலைய பகுதிகளிலும் போக்குவரத்து மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தந்து தொடர்ச்சியாக கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
