
பழங்கோட்டை மெயின் ரோட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயம் குருவிகுளம் காவலர்கள் நடவடிக்கை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கரடிகுளத்தை சேர்ந்தவர் சங்கர் பழங்கொட்டை மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார் வேலை முடிந்ததும் தன் மோட்டார் சைக்கிளை பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்
இது குறித்து குருவிகுளம் காவல் நிலையத்தில் சங்கர் புகாரளித்தார் போலீஸ் விசாரணையில் சம்பகுளத்தை சேர்ந்த முத்துச்சாமி மகன் மகேந்திரன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.
இது தொடர்பாக குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்
