


மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து ரூ.70 ஆயிரம் காப்பர் காயல் திருட்டு
பலே கில்லாடியை தேடி வரும் காவல்துறையினர்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கெண்டேயன அள்ளி கிராமத்தில் மின்சார பற்றாக்குறையால் வீடு, நிலங்களுக்கு போதிய மின்னழுத்தம் கிடைக்காததால் மோட்டார், மிக்ஸி, கிரைன்டர், பல்புகள் அடிக்கடி பழுதாகி வந்தன, மக்களின் இந்த பிரச்சனையை தீர்க்க மாரண்டஅள்ளி மின் வாரியம் சார்பில் மஞ்சு மாரியம்மன் கோவில் அருகில் புதிதாக 64 கே.வி. இம்ப்ரூமெண்ட் டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டது.
டிரான்ஸ்பர் வைத்து சில நாட்களே ஆன நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் டிரான்ஸ்பர்மருக்கு வரும் மின்சாரத்தை துண்டித்து டிரான்ஸ்பார்மரில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செம்பு காயில்களை திருடி சென்றுள்ளனர்.
கிராம மக்கள் மின்சாரம் இல்லாததால் மாரண்டஅள்ளி மின் வாரியத்திற்க்கு புகார் தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் வந்து டிரான்ஸ்பார்மரை பார்த்து அதில் உள்ள காயில் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மாரண்டஅள்ளி உதவி பொறியாளர் அருனகிரி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
