Police Department News

இன்று 12.03.2023 மகளிர் தினத்தை கொண்டாடவும்,காவலர்களை ஊக்கப்படுத்துவும் ” மகளிர் தின விழாவை “திருP.மகேந்திரன் ( துணை ஆணையாளர்) அவர்கள் ஏற்பாட்டில் மற்றும் ” வல்லமை உங்கள் வசம்”ROTARY CLUB OF CHENNAI GREEN CITY RI District 3232 அவர்கள் மூலம் நடைப்பெற்றது.

இன்று 12.03.2023 மகளிர் தினத்தை கொண்டாடவும்,காவலர்களை ஊக்கப்படுத்துவும் ” மகளிர் தின விழாவை “திருP.மகேந்திரன் ( துணை ஆணையாளர்) அவர்கள் ஏற்பாட்டில் மற்றும் ” வல்லமை உங்கள் வசம்”ROTARY CLUB OF CHENNAI GREEN CITY RI District 3232 அவர்கள் மூலம் நடைப்பெற்றது.

“வல்லமை உங்கள் வசம் “by
DR.NAPPINNAI SERAN
(Professor, Meenakshi Medical College & Research Institute
(A Positive Vibe Session in honour of Women Police )
அவர்கள் பெண்களுக்கு மருத்துவ மற்றும் அனுபவம் ரீதியாக மன அழுத்தத்தை எப்படி கையாளுவது பற்றி நல்ல சிந்தனையுடன் கூடிய நல்ல ஆலோசனையையும் வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
RTN DR.SUMEDHA NANDA KUMAR
(First Lady RI District 3232) அவர்கள் மருத்துவ ரீதியாக உணவு பழக்கத்தை எப்படி கையாளவேண்டும் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய நல்ல கருத்துகளை கூறி மகளிர் காவலர்களை உற்சாகபடுத்தினார்கள்.

திருமதி. K.C ShreeDevi (J5 காவல் ஆய்வாளர் குற்றப்பிரிவு) அவர்கள் நமக்கு நாமே முதல் Hero வாக உருவாக்கி கொண்டால் நாட்டையும்,வீட்டையும் வெற்றி கொள்ளலாம் என்ற அசத்தலான பேச்சு மூலம் பெண் காவலர்களுக்கான மன தைரியத்தை தூண்டி ஊக்கபடுத்தி பேசினார்கள்.
திருமதி.C.விஜயகுமாரி( J2 மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்) விண்ணையும் மண்ணையும் ஆளும் தைரிய லட்சுமியாக நமக்கு நாமே ஊக்கபடுத்தி காக்கிச்சட்டையை சேவையாக கருதாமல் தியாகமாக செய்வோம் என்று உறுதிமொழியுடன் நல் ஆலோசனையும் வழங்கினார்கள்.

Guest of honour
THIRU.DR.P.MAHENDREN IPS (Deputy commissioner of police Adyar)
Special Guest
THIRU S.NELSON(Assistant Commissioner of Police Adyar )
Rtn.Senthil Nathan.C ( President )
Prakash Rao PLN(Secratary )
Rtn.S.leeladevi(Chairman Women Empowerment )
Mr.V.Gopi
RCC Blue waves ch.
Mr.Dr.Boobalan
RCC Blue waves ch.
இலக்கியங்கள் மூலமாக மற்றும் பலர் பேசியதாவது
காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.

பாரதியாரின் புதுமைப்பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பெண்மைக் குணங்களைத் தவிர்ப்பவள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற வினாவிற்கு விடையாக, “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்” விரும்புபவர்கள் என்கிறார். பாரதியின் சிந்தனைகளைப் பார்க்கும்போது, பாரதியிடம் பெண்ணடிமை குறித்த வலுவான மறுப்புணர்வு இருந்திருக்கிறது என உணர்ந்துகொள்ள முடிகிறது. பெண்கள் மீதான சமூகத்தளைகள் களைந்தெறியப்பட வேண்டும் என்ற வேட்கை பாரதியாரிடம் அதிகமாக இருந்தது என்பதைப் பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அடையாறு மாவட்டம் மகளிர் பெண்காவர்களும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்தனர்.

பொறுப்புடன்
V.GOPI(President
RCC Blue waves ch tn ) மற்றும் RCC Blue waves ch tn Besant Nagar.

Leave a Reply

Your email address will not be published.