
மதுரையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முன்னிலையில் வெகு தூர ஓட்டப் பந்தயம் விழிப்புணர்வு
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 29.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு , ஆண்கள் (5 K.M) மற்றும் பெண்கள் (3 K.M) என இரு பாலர்களுக்கும் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் ஐந்து கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தையும் நிறைவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் ரொக்க பரிசு மற்றும் தலைக்கவசங்களை பரிசாக வழங்கினார்கள்
