பெற்றோர் ஏற்கமாட்டார்கள் என நினைத்து தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி
நாகை மாவட்டம் வடபதி அருகே உள்ள சோழம்பேட்டையை சேர்ந்தவர் கிருத்திகா–(வயது26).
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள நாச்சாங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(30).
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கோவை பீளமேடு அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
கிருத்திகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
வர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கிருத்திகா தனது கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு கிருத்திகாவுக்கு செல்போனில் மிஸ்டுகால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது, சிவகங்கையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் எடுத்தார். அவருடன் கிருத்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
கிருத்திகா தனது காதலரிடம் திருமணம் ஆனதை மறைத்து பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள், உனக்கு குழந்தை உள்ளது. எனவே வாலிபருடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்தனர். ஆனால் இதனை காதில் வாங்கி கொள்ளாமல் அவர் வாலிபருடன் பழகினார்.
இதற்கிடையே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் சின்னியம் பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் கணவன்-மனைவி என கூறி அறை எடுத்து தங்கினர்.
அறையில் 2 பேரும் ஜாலியாக இருந்தனர். மேலும் கோவையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர்.
அப்போது தான் கிருத்திகா தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை காதலனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. திருமணம் ஆன பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கிருஷ்ணன் நினைத்தார்.
வேறு எங்காவது செல்லலாம் என்றால் எடுத்து வந்த பணம் அனைத்தும் தீர்ந்து விட்டது. இதனால் கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்ததும், இதனால் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்ததும் தெரியவந்தது.தொடர்ந்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.